வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில் அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து அவர் வாக்கை கேட்கிற பாக்கியம் உருவானது. பல விஷயங்கள் கூறப்பட்டாலும், நவராத்திரி காலத்தை பற்றி அவர் கூறிய பொழுது,
"இவ் நவராத்திரியில் அம்பாள் வீட்டுக்கு வருவாள். ஆகவே, பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் தேவையான சீர்களை செய்வது நன்று. அம்மையே வந்து பெற்றுக் கொண்டு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், அருள் புரிவாள்." என்றார்.
ஆகவே, நவராத்திரி தொடங்கிவிட்ட நிலையில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற வழிகளில், மேற்கூறியபடி நன்மை செய்து, தாயின் அருளை பெற்றுக் கொள்ளவும். வாங்கும் பொருட்களை அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்பாள் கோவிலில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, தாயிடம் வந்து வாங்கிக்கொள்ளும் படி விண்ணப்பித்து, பின் கொடுக்கவும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!